Friday, October 3, 2008

வானவில் வரலாறு

சத்யா என்றொறு தேவதைக்கு என் சமர்ப்பணம்

காதல் கடிதம்

எனக்கு ஓர் தபால் வந்தது
பிரித்துப் பார்த்ததில் அதிர்ச்சி
காதல் கடிதம் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் காதலே கடிதத்தில் வந்திருக்கிறதே...
ஆம் கடிதத்தில் உன் புகைப்படம்

குடிகாரன்

சாலையி்ல் தள்ளாடியபடி நடந்தேன்
குடிகாரன் என்றார்கள்
ஆம் காதல் போதையில் என் இதயம்



நிலா பார்த்தல்

என் தந்தையை கோபித்துக் கொண்டேன்
பெண் பார்ப்பதாக கூறி விட்டு
நிலாவைக் காட்டுகிறீர்களே என்று




தென்றல் பேச்சு

தனியாகப் பேசுங்கள் என்று
என்னுடன் உன்னை அனுப்பினார்கள்
எனக்கு உள்ளூர உதறல் - ஏனெனில்
அதுவரை நான் தென்றலுடன் பேசியதில்லை.


தாலாட்டு

அலுத்து களைத்து ஊர் திரும்பினேன்
எப்படி தெரிந்து கொண்டாய் என தெரியவில்லை
தாலாட்டாய் உன் தொலைபேசி அழைப்பு


சார்பியல் தத்துவம்

ஐன்ஸ்டீனுடய சார்பியல் தத்துவத்தின் 
பொருள் விளங்கியது உன் தொலைபேசி
அழைப்புக்காக நான் காத்திருந்த போது


பொறி

கணிப்பொறியும் மென்பொருளும் என் கடவுளாக இருந்த காலத்தில்
உன் கண்பொறியால் என்னை மீட்டெடுத்தாய்
மாட்டிக்கொண்டது நான் என்றபோதும், மீள மனமில்லை
ஏனெனில் உன்னைவிட சிறந்த மென்பொருளை இன்னும் உருவாக்கவில்லை

ராசு கந்தசாமி

2 comments:

வணங்காமுடி...! said...

தல, நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா? இந்தப் பின்னு பின்னுறீங்க..

\\காதலே கடிதத்தில் வந்திருக்கிறதே...ஆம் கடிதத்தில் உன் புகைப்படம்\\

\\பெண் பார்ப்பதாக கூறி விட்டுநிலாவைக் காட்டுகிறீர்களே என்று\\

\\அதுவரை நான் தென்றலுடன் பேசியதில்லை\\

\\உன்னைவிட சிறந்த மென்பொருளை இன்னும் உருவாக்கவில்லை\\

தபு சங்கர் தோத்தாரு போங்க... கோவிச்சுக்கலன்னா சில யோசனைகளை சொல்லலாம்னு நினைக்கிறேன்.

கவிதை வரிகளை கொஞ்சம் மடிச்சுப் போடுங்க. இதோ இப்படி...

கணிப்பொறியும் மென்பொருளும்
என் கடவுளாக இருந்த காலத்தில்
உன் கண்பொறியால்
என்னை மீட்டெடுத்தாய்
மாட்டிக்கொண்டது நான் என்றபோதும்,
மீள மனமில்லை
ஏனெனில்
உன்னைவிட சிறந்த மென்பொருளை
இன்னும் உருவாக்கவில்லை

அப்புறம் word verification, comment moderation இதெல்லாம் தூக்கிருங்க. பின்னூட்டம் போடுறவங்களை கடுப்பாக்கும்.

கடைசியா ஒண்ணு. அடிக்கடி இந்த மாதிரி கவிதைகள் எழுதுங்க. ரொம்ப அருமையா இருக்கு.

சுந்தர்
ருவாண்டா.

வணங்காமுடி...! said...

தல, இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், வானவில் வரலாறு - கவித்துவமா தலைப்பு வச்சுட்டு அசிங்கமா ஆங்கிலத்துல போட்டுருக்கீங்களே? அழகான தமிழ்-ல மாத்துங்க தலைவா...